Monday, August 31, 2009

படித்ததில் பிடித்தது - 3

ஸ்டெல்லா புருசின் - அது ஒரு நிலாக்காலம்
நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது நண்பன் ஒருவன் ஆனந்த விகடனில் தொடராக வந்த அது ஒரு நிலாக்காலம் கதையை பைண்டு வடிவில் கொண்டு வந்தான்.அடுத்த ஒரு மாதத்துக்கு ஹாஸ்டலின் ஒவ்வொரு அறையாக அது சென்றது வந்தது.அதற்கு பிறகு ஒரு பத்து முறையாவதுபடித்து இருப்பேன்.வெறும் சம்பவங்கள்.காதல் நினைவுகள்.நிறைவேறாத அந்த காதலுக்காக எங்க ஹாஸ்டலின் நண்பர்கள் அனைவரும் துக்கப்பட்டோம்.கமல்/ரஜினி அமலா என திரைக்கதை அமைத்தோம் காதலிப்பவர்களும் காதலிக்க போகிறவர்களும் படிக்க வேண்டிய கதை அது.செயின்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேஷன் நான் பார்த்ததில்லை.ஆனாலும் அந்த ஏரியா பழக்கப்பட்ட உணர்வு எனக்கு உண்டு.இந்த கதை படித்ததால்.ராம்குமாரும் சுகந்தாவும் நமது நண்பர்கள் போன்ற உணர்வு வரும்..இன்றும் சென்னை வருகையில் மாநகர பேருந்து பார்க்கையில் ராம்குமார் சுனந்தாவை கண்கள் தேடும். படித்து பாருங்கள் நண்பர்களே நீங்களும் தேடுவீர்கள்.திரைப்படமாய் ஆக்க முயற்சி நடந்ததாய் படித்த நினைவு உண்டு.தெரியவில்லை.நடக்கவில்லையென்றால் நலம்.நம்மவர்கள் திரைக்கதையை தெருக்கதையாக மாற்றுவர்கள்பிழைத்துவிட்டு போகட்டும் ராம்குமாரும் சுனந்தாவும் நாமளும்தான்.

4 comments:

தேவன் மாயம் said...

அது ஒரு அற்புதமான காதல் கதை!!

Anonymous said...

படிக்கலாம்...

SUMAZLA/சுமஜ்லா said...

லின்க் கொடுத்ததால் வந்தேன், வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

இக்கதையை படிக்கும் அக்காலத்தில் பல நிகழ்வுகள் என் வாழ்கையிலும் ஒத்துப்போனதில் எனக்கும் பிடித்த எழுத்தாளாராக மாறிப்போனார்.
ஆனாலும் தூக்கு மாட்டி செத்துப்போனது “கொடுமை” தான்.