Sunday, May 8, 2011
Monday, August 31, 2009
படித்ததில் பிடித்தது - 3
நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது நண்பன் ஒருவன் ஆனந்த விகடனில் தொடராக வந்த அது ஒரு நிலாக்காலம் கதையை பைண்டு வடிவில் கொண்டு வந்தான்.அடுத்த ஒரு மாதத்துக்கு ஹாஸ்டலின் ஒவ்வொரு அறையாக அது சென்றது வந்தது.அதற்கு பிறகு ஒரு பத்து முறையாவதுபடித்து இருப்பேன்.வெறும் சம்பவங்கள்.காதல் நினைவுகள்.நிறைவேறாத அந்த காதலுக்காக எங்க ஹாஸ்டலின் நண்பர்கள் அனைவரும் துக்கப்பட்டோம்.கமல்/ரஜினி அமலா என திரைக்கதை அமைத்தோம் காதலிப்பவர்களும் காதலிக்க போகிறவர்களும் படிக்க வேண்டிய கதை அது.செயின்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேஷன் நான் பார்த்ததில்லை.ஆனாலும் அந்த ஏரியா பழக்கப்பட்ட உணர்வு எனக்கு உண்டு.இந்த கதை படித்ததால்.ராம்குமாரும் சுகந்தாவும் நமது நண்பர்கள் போன்ற உணர்வு வரும்..இன்றும் சென்னை வருகையில் மாநகர பேருந்து பார்க்கையில் ராம்குமார் சுனந்தாவை கண்கள் தேடும். படித்து பாருங்கள் நண்பர்களே நீங்களும் தேடுவீர்கள்.திரைப்படமாய் ஆக்க முயற்சி நடந்ததாய் படித்த நினைவு உண்டு.தெரியவில்லை.நடக்கவில்லையென்றால் நலம்.நம்மவர்கள் திரைக்கதையை தெருக்கதையாக மாற்றுவர்கள்பிழைத்துவிட்டு போகட்டும் ராம்குமாரும் சுனந்தாவும் நாமளும்தான்.
Friday, December 12, 2008
படித்ததில் பிடித்தது
துணிவு என்றால் ஒன்றே ஒன்றுதான் உண்டு.அதாவது இதுவரை நடந்து முடிந்தவைகளைஎல்லாம் மனதில் சேர்த்து வைக்காமல்,அவைகளையெல்லாம் பற்றிக்கொண்டு இருக்காமல்,நடந்து முடிந்தவைகளைஎல்லாம் அளித்துவிடுவதே துணிவு ஆகும்.
Tuesday, December 9, 2008
படித்ததில் பிடித்தது
நம் பிரச்சனை என்ன .நீங்கள் கவலைப்பட வேண்டாம் .கடவுள் பார்த்துக்கொள்வார் என்று யாரோ சொன்னதை நம்பி நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம்.எதனால் இது நடக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் இது பண்ணினால் கடவுளுக்கு கோபம் வருமா ,அது பண்ணினால் சந்தோசம் வருமா என்று கணக்குப் போடுகிறோம்.
படைப்புத் தொழிலை இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற அளவுக்குக் கடவுள் தனது பணியைச் செவ்வனே செய்து முடித்துவிட்டரல்லவா .
சிந்திக்க மூளையையும்,செயல்பட கை,கால்களையும் உங்களுக்கு அளித்திருக்கிறார் அல்லவா .அவற்றைப் பயன்படித்திக்கொண்டு,உங்கள் வாழ்க்கையை மேன்மையாக்கிக் கொள்வது உங்கள் பொறுப்பு தானே .
எதாவது சரியாக நடக்கவில்லை என்றால்,அது கடவுள் அல்லது இயற்கையின் குற்றம் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு,உங்களைத் திருத்திகொள்வதுதானே புத்திசாலித்தனம்.
நன்றி :
உனக்காகவே ஒரு ரகசியம் .
சத்குரு ஜக்கி வாசுதேவ்